Tuesday, March 26, 2013

நில் கவனி செல்லாதே செய். 2


முன் குறிப்பு:-


முக நூலில் சுட்டது


" உங்க டூத்பேஸ்ட் " - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!

" உங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா..? " -னு
சூர்யா கேட்டாரேன்னு அந்த பேஸ்ட் வாங்கி
யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்...

அப்புறம்
" உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா..? " -னு
அனுஷ்கா கேட்டாங்க... அதனால அதையும்
வாங்கினேன்..

( ஹி., ஹி., அனுஷ்கா பீல் பண்ணினா
எனக்கு மனசு தாங்காதுல்ல... )

சரி மேட்டர்க்கு வருவோம்...

கம்பெனிக்காரன் குடுத்த காசை வாங்கிட்டு
அது இருக்கா..? இது இருக்கான்னு
கேட்டாங்களே தவிர... அதுல நிக்கோடின்
இருக்குன்னு யாருமே சொல்லலை...

என்னாது நிக்கோடினா..?!!

( அடப்பாவிகளா.. நிம்மதியா பல்லு வெளக்க
கூட விட மாட்டீங்களா..?!!! )

DISPAR ( Delhi Institute of Pharmaceutical Sciences & Research )
நிறைய இந்திய டூத்பேஸ்ட்ல நிக்கோடின்
இருக்குன்னு கண்டுபிடிச்சி இருக்காங்க..

24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல
7 Brands-ல(Colgate Herbal, Himalaya, Neem paste, Neem Tulsi, RA Thermoseal, Sensoform and Stoline)
நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு..

"Out of the ten brands of toothpowders examined, six - Dabur Red, Vicco, Musaka Gul, Payokil, Unadent and Alka Dantmanjan - were found to contain nicotine"

ஒரு சிகரெட்லயே 2mg தான் நிக்கோடின்
இருக்காம்.. ஆனா Colgate Herbal-ல
அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்..

அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல
பல்லு விளக்கினா... அது 9 சிகரெட்
குடிச்சதுக்கு சமம்... அவ்வ்வ்....!!!
இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே
வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு
எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம
பத்திரிக்கை , டி.வி சேனல்களோட
சேவையை எப்படிதான் பாராட்றது..?
" என்னங்க இது அநியாயமா இருக்கு..?
நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?"-னு
தானே கேக்க வர்றீங்க..?
ம்ம்... என்னங்க பண்றது..?
காசுக்காக மக்களுக்கு கவர்மென்ட்டே
சாராயம் விக்கிற நாடுங்க இது..
இங்கே போயி நியாயமாவது, தர்மமாவது..!

2 comments:

  1. நகைச்சுவை கலந்த விழிப்புணர்வு பதிவு . ஆனால் இப்படியெல்லாம் இருக்கானனு ஆச்சரியமா இருக்கு!
    //அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல
    பல்லு விளக்கினா... அது 9 சிகரெட்
    குடிச்சதுக்கு சமம்... அவ்வ்வ்....!!!//
    இது மிகப்பெரிய அதிர்ச்சியா இருக்கு .
    நமக்கு ஏன் வம்பு பல்லு விலக்கரவங்கதான் இதப்பத்தி கவலைப்படனும் :)

    ReplyDelete